தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உலக தேனீ தின விழா

 உலக தேனீ தின விழா

 உலக தேனீ தின விழா


UPDATED : மே 22, 2026 05:46 AM

ADDED : மே 22, 2026 02:47 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 22, 2026 05:46 AM ADDED : மே 22, 2026 02:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியில் உலக தேனீ தின விழா நடந்தது.

காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம், புதுச்சேரி பல்கலைக் கழக தொடக்க நிறுவன மையம், புத்தாக்கக் குழு, இயற்கை மற்றும் உள்ளூர் விவசாயிகள் கூட்டுறவு சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து உலக தேனீ தின விழாவை நடத்தின.

மணக்குள விநாயகர் கல்லுாரி தலைவருமான தனசேகரன் தலைமை தாங்கி, துவக்க உரையாற்றினார். புதுச்சேரி பல்கலைக்கழக தொடக்க நிறுவன மைய இயக்குநர் சாருமதி வரவேற்றார்.

கல்லுாரி இயக்குநர் வெங்கடாஜலபதி வாழ்த்துரை வழங்கினார். பொருளாளர் ராஜராஜன் சிறப்புரையாற்றினார்.



நிகழ்ச்சியில் தேனீ வளர்ப்பில் சிறந்து விளங்கும் முன்னோடி வளர்ப்பாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். சிறந்த கண்காட்சி அரங்குகள், ஓவியப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து சிறப்பு நுால் வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சியில், சென்னை மாநில அலுவலகத்தின் மாநில இயக்குநர் சுரேஷ், உதவி இயக்குநர் பாஸ்கர், புதுச்சேரி பல்கலைக் கழக பசுமை வளாக ஒருங்கிணைப்பாளர் நந்திவர்மன், புதுச்சேரி இயற்கை மற்றும் உள்ளூர் விவசாயிகள் கூட்டுறவு சங்க செயலாளர் நடேசன் உள்ளிட்டோர் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர்.

வேளாண் அறிவியல் பள்ளி முதல்வர் முகமது யாசின் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us