/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உலக சைக்கிள் தின விழிப்புணர்வு ஊர்வலம்
/
உலக சைக்கிள் தின விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஆக 18, 2025 03:57 AM

திருபுவனை: கலிதீர்த்தாள்குப்பம் காமராஜர் அரசு கலைக் கல்லுாரியில் என்.சி.சி., தரைப்படை பிரிவு சார்பில் உலக சைக்கிள் தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
மதகடிப்பட்டு அடுத்த கலிதீர்த்தாள்குப்பம் காமராஜர் அரசு கலைக் கல்லுாரியில் என்.சி.சி., தரைப்படை பிரிவு சார்பில் உலக சைக்கிள் தினத்தையொட்டி விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நேற்று நடந்தது.
கல்லுாரி வளாகத்தில் நடந்த விழாவிற்கு முதல்வர் கனகவேல் தலைமை தாங்கினார். என்.சி.சி., தரைப்படை பிரிவு அலுவலர் லெப்டினன்ட் கதிர்வேல் வரவேற்றார்.
திருபுவனை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.மாணவ-மாணவிகள் கல்லுாரி வளாகத்தில் துவங்கி திருக்கனுார் சாலை, கலிதீர்த்தாள்குப்பம், ஆண்டியார்பாளையம் நான்குமுனை சந்திப்பு மற்றும் முக்கிய வீதிகளின் வழியே ஊர்வலமாக சென்று மீண்டும் கல்லுாரி வளாகத்தை வந்தடைந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை என்.சி.சி., அலுவலர் கதிர்வேல் மற்றும் மாணவ-மாணவிகள் செய்திருந்தனர்.