/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தாகூர் கல்லுாரியில் உலக புத்தக தினம்
/
தாகூர் கல்லுாரியில் உலக புத்தக தினம்
ADDED : ஏப் 30, 2025 12:26 AM

புதுச்சேரி: புதுச்சேரி தாகூர் அரசு கலை அறிவியல் கல்லுாரியில், அரவிந்தர் நுாலகம் மற்றும் வாசிப்பு எழுத்துத்திறன் வளர்ப்பு மையம், சென்னை நுாலக சங்கம் சார்பில், உலகப் புத்தக தின விழா நடந்தது.
வாசிப்பு எழுத்துத்திறன் வளர்ப்பு மைய ஒருங்கிணைப்பாளர் அஞ்சு நாயர் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் (பொ) கலா தலைமை தாங்கினார்.
சென்னை நுாலக சங்கத்துடன், தாகூர் அரசு கலை அறிவியல் கல்லுாரி நுாலகம் மற்றும் வாசிப்பு எழுத்துத் திறன் வளர்ப்பு மையம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. பின், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து நடந்த கருத்தரங்கில் சென்னை நுாலகச் சங்கத்தின் முன்னாள் இயக்குநர் நித்தியானந்தம் 'உங்கள் வழியைப் படியுங்கள்' எனும் தலைப்பிலும், தாகூர் அரசு கலை அறிவியல் கல்லுாரி பேராசிரியர் தாமரைச்செல்வி 'வாசிப்பு ஒரு கலை' எனும் தலைப்பிலும் பேசினர்.
கல்லுாரி நுாலகர் தீபக் நன்றி கூறினார்.

