ADDED : ஏப் 01, 2025 04:22 AM

திருக்கனுார்: திருக்கனுார் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம், குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை சார்பில் உலக நுகர்வோர் தின விழா திருக்கனுாரில் நடந்தது.
விழாவிற்கு, சுரேஷ் தலைமை தாங்கினார். நுகர்வோர் சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு தலைவர் முத்துரங்கம், பரமசிவம், செந்தில்வேலன் முன்னிலை வகித்தனர்.
விழாவில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு, நுகர்வோர் தினத்தை யொட்டி நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
விழாவில், புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் பூசல்கள் குறை தீர்ப்பு ஆணைய நீதிபதி முத்துவேல், உறுப்பினர்கள் சுவிதா, ஆறுமுகம், உள்ளாட்சித்துறை இணை இயக்குனர் சவுந்தர்ராஜன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
புதுச்சேரி நுகர்வோர் சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு நிர்வாகிகள் திலகவதி, சங்கரலிங்கம், சந்திரகுமார், சுதா, சந்திரா, கதிர் கிருஷ்ணமூர்த்தி, அறிவழகன் ஆகியோர் நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.
இதில், அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு தலைவர் சேஷாச்சலம், புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாயக் கல்லுாரி பேராசிரியர் அரங்க முருகையன், சந்திரசேகர், அருள்கணேஜ், சந்துரு, பச்சைமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

