மணக்குள விநாயகர் கல்லுாரியில் உலக சுற்றுச்சூழல் தின விழா
மணக்குள விநாயகர் கல்லுாரியில் உலக சுற்றுச்சூழல் தின விழா
ADDED : ஜூன் 07, 2026 03:43 AM

புதுச்சேரி: மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியில் உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடபட்டது.
உலக சுற்றுச்சூழல் தினம் 'இயற்கையின் துாண்டதலுடன் பருவநிலைக்காகவும் எதிர்காலத்திற்காகவும்' என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, மணக்குள விநாயகர் கல்விக்குழுமத்தின் தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். பொருளாளர் ராஜராஜன், கல்லுாரி இயக்குநர் வெங்கடாசலபதி ஆகியோர் முன்னிலை வகித்து, கல்லுாரி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டனர்.
அவர்கள் பேசுகையில், 'மாணவர்கள் சுத்தமான மற்றும் பசுமையான சூழலை உருவாக்க வேண்டும் என்றும், மரங்களின் முக்கியத்துவம் மற்றும் தற்போதைய காலநிலை மாற்றத்தின் பங்கு குறித்து வலியுறுத்தினர்.
தொடர்ந்து கல்லுாரி மாணவர்கள், பேராசிரியர்கள் தாய் மண்ணை நேசிக்கவும், பாதுகாக்க வும், மீட்டெடுக்கும் வகையில் உறுதிமொழி எடுத்தனர். பின், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களை தவிர்க்கவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். விழாவில் 500 மரக்கன்றுகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கல்லுாரியின் சிவில் பொறியியல் துறைத் தலைவர் சுந்தரராமன் செய்திருந்தார்.
