sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உலக செவித்திறன் நாள் விழிப்புணர்வு கலந்தாய்வு

 உலக செவித்திறன் நாள் விழிப்புணர்வு கலந்தாய்வு

 உலக செவித்திறன் நாள் விழிப்புணர்வு கலந்தாய்வு


ADDED : மார் 06, 2026 04:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2026 04:17 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: உலக செவித்திறன் நாளையொட்டி, புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவமனை மற்றும் முதுகலை நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து துறை மருத்துவர்களுக்கு விழிப்புணர்வு கலந்தாய்வு நடந்தது.

நிகழ்ச்சிக்கு காது மூக்கு தொண்டை நிபுணர் சந்தோஷ் குமார் தலைமை தாங்கினார். கடந்த ஓராண்டாக பள்ளிகளில் 70 சிறப்பு முகாம்கள் மூலம் 7,598 மாணவர்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 50 முகாம்களில் 3,500 பேர், ராஜிவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் 5,708 குழந்தைகளுக்கு செவித்திறன் பரிசோதனை செய்யப்பட்டது.

426 பேருக்கு செவித்திறன் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தகுதியுள்ள 71 பேருக்கு விலையில்லா நவீன காது கேட்கும் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில் தேசிய காதுகேளாமை தடுப்பு திட்ட அலுவலர் ஸ்டாலின் சிவகுருநாதன் பேசுகையில், 'இந்த ஆண்டு குழந்தைகளுக்குச் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.

குழந்தைகளின் செவித்திறன் பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க பெற்றோர்கள் போதிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்' என்றார்.

நிகழ்ச்சியில் மருத்துவக் கண்காணிப்பாளர் ரமேஷ், உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஆத்மநாபன், குறை தீர்ப்பு அதிகாரி ரவி, மக்கள் தொடர்பு அதிகாரி ஷர்மா மற்றும் மருத்துவமனை உயரதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us