வெங்கடேஸ்வரா பாராமெடிக்கல் கல்லுாரியில் உலக சிறுநீரக தின விழா
வெங்கடேஸ்வரா பாராமெடிக்கல் கல்லுாரியில் உலக சிறுநீரக தின விழா
ADDED : மார் 15, 2024 12:10 AM

வில்லியனுார்: அரியூர் வெங்கடேஸ்வரா பாராமெடிக்கல் கல்லுாரி சார்பில் உலக சிறுநீரக தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு கண்டமங்கலம் வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளியில் அரியூர் வெங்கடேஸ்வரா பாராமெடிக்கல் கல்லுாரி டயாலிசிஸ் பிரிவு சார்பில் உலக சிறுநீரக தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சேவியர்சந்திரகுமார் தலைமை தாங்கினார். வெங்கடேஸ்வரா பாராமெடிக்கல் கல்லுாரி முதல்வர் டாக்டர்.ஆனந்தவைரவேல் உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு சிறப்புரையாற்றினார்.
டயாலிசிஸ் துறை பேராசிரியர் சவுமியா, சிறுநீரக நோயின் காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிறுநீரக நோய் பாதுகாப்பு குறித்து பேசினார். அதனை தொடர்ந்து சிறுநீரக நோய் பாதுகாப்பு குறித்து பாராமெடிக்கல் கல்லுாரி மாணவர்கள் நாவரசு, பரத், நிவேதா, அம்சவல்லி ஆகியோர் நடித்த குறும்படம் திரையிடப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
