தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உலக மனநல விழிப்புணர்வு மாதவிழா

உலக மனநல விழிப்புணர்வு மாதவிழா

உலக மனநல விழிப்புணர்வு மாதவிழா


ADDED : அக் 14, 2025 05:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 14, 2025 05:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : அரியாங்குப்பம் மணவெளியில் இயங்கி வரும் அரிச்சுவடி மனநல மையம் சார்பில், உலக மனநல விழிப்புணர்வு மாதவிழா காந்தி திடல் கடற்கரை சாலையில் நடந்தது.

சிறப்பு விருந்தினராக முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவினை துவக்கி வைத்தனர்.

விழாவில் அமைச்சர் லட்சுமிநாராயணன், பாஸ்கர் எம்.எல்.ஏ., ரோட்ரிக் மாவட்ட கவர்னர் லியோன் ரோட்டிக், மாவட்ட கவர்னர் வைத்தியநாதன், மனநல மருத்துவர் சத்தியமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

மனநல மருத்துவர் பாலன் பொன்மனி ஸ்டீபன், பொது மருத்துவர் அசோகன், திரைப்பட இயக்குனர் ரவிச்சந்திரன், ரோட்ரிக் கிளப் ஆப் அரிக்கமேடு போர்ட் செயலாளர் சதீஷ்குமார், தலைவர் சத்தியவாணன், செயலாளர் நவசக்தி, பொருளாளர் கோதை சதீஷ்குமார், கலைச்செல்வி, ரகுராம், புண்ணியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவையொட்டி, கேரம், கோலம், ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னதாக அரிச்சுவடி மனநல மையம் இயக்குனர் இளவழகன், ஆத்திச்சூடி பள்ளி தாளாளர் சத்தியவண்ணன், அரிச்சுவடி பிரஸ்டி அரசமாதேவி ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினரை வரவேற்றனர்.

டாக்டர் சத்தியவாணன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us