/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாலாஜி வித்யாபீத் பல்கலையில் உலக மருந்தாளுனர் தினம்
/
பாலாஜி வித்யாபீத் பல்கலையில் உலக மருந்தாளுனர் தினம்
பாலாஜி வித்யாபீத் பல்கலையில் உலக மருந்தாளுனர் தினம்
பாலாஜி வித்யாபீத் பல்கலையில் உலக மருந்தாளுனர் தினம்
ADDED : செப் 28, 2024 05:44 AM

பாகூர் : பிள்ளையார்குப்பம் பாலாஜி வித்யாபீத் நிகர்நிலை பல்கலைக்கழக மருந்தியல் கல்லுாரியில் 'உலக மருந்தாளுனர் தினம்' கொண்டாடப்பட்டது.
விழாவில், இணை பேராசிரியர் சக்தி கணபதி வரவேற்றார். கல்லூரியின் துணை முதல்வர் விஜயன் நோக்கவுரையாற்றினார்.
பாலாஜி வித்யாபீத் அங்கீகார விவகாரங்கள் இயக்குனர் உஷா கருணாநிதி மருந்தாளுநர்களின் முக்கியத்துவத்தை விளக்கினார்.
விழாவில், போட்டி யில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கிய, லைப் கேர் பார்முலேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் இயக்குனர் சீனிவாசன் பேசுகையில், 'சுகாதாரத்துறையில் மருந்தாளுனர்களின் பங்கு பன்முகத்தன்மை கொண்டதாக மாறி உள்ளது.
உலக மருந்து உற்பத்தியில் இந்தியா 40 சதவீதம் பங்களிக்கிறது. இதனால் மற்ற துறைகளை போல் அல்லாமல் மருந்தியல் மாணவர்களுக்கு அதிகப்படியான வேலைவாய்ப்பு பல்வேறு துறைகளில் உள்ளது என்றார்.
இணை பேராசிரியர் பிரதிப்ராஜ் உலக மருந்தாளுனர் தினத்தை முன்னிட்டு 'மாணவருடைய கேம் கிளாஸ் 2024' என்ற தலைப்பில் நடைபெற்ற கலை மற்றும் விளையாட்டு போட்டிகள் பற்றிய அறிக்கையை வெளியிட்டார். துணை பேராசிரியர் புஷ்பலதா நன்றி கூறினார்.