தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உலக மருந்தாளர் தின விழா

உலக மருந்தாளர் தின விழா

உலக மருந்தாளர் தின விழா


ADDED : செப் 26, 2026 10:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2026 10:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி ராஜீவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் உலக மருந்தாளர் தின விழா கொண்டாடப்பட்டது.

பொதுமக்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது, முறையான மருந்து விநியோகத்தை உறுதி செய்வது, மின்னணுவின் முன்னேற்றத்தை மருத்துவத்தில் இணைப்பது, பக்க விளைவு தடுப்பதிலும் மருந்தாளுனர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய சேவையை பாராட்டும் வகையில் உலக மருந்தாளுநர் தின விழா கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் புதுச்சேரி ராஜிவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் உலக மருந்தாளர் தின விழா கொண்டாடப்பட்டது. மூத்த மருந்தாளர் புகழேந்தி வரவேற்றார். மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி அருள் விசாகன், மக்கள் தொடர்பு அதிகாரி குரு பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், மூத்த மருந்தாளுனர்கள் முன்னிலையில் பல்வேறு ஆலோசனைகள் மற்றும் கலந்துரையாடல்கள் நடைபெற்றது. இவ்விழாவில் நோயாளிகளின் நாள் எனக்காக தங்களின் பணியை முழு அர்ப்பணிப்புடன் செய்வோம் அனைத்து மருந்தாளுர்களும் உறுதிமொழி எடுத்தனர்.

ஏற்பாடுகளை மூத்த மருந்தாளுனர் ஜெய பாண்டியன் செய்திருந்தார். மருந்தாளுனர் பொன்னம்மாள் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us