தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உலக பிசியோதெரபி தின விழா

உலக பிசியோதெரபி தின விழா

உலக பிசியோதெரபி தின விழா


ADDED : செப் 06, 2026 11:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 06, 2026 11:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: உலக பிசியோதெரபி தினத்தையொட்டி, புதுச்சேரி  லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லுாரி மற்றும் பிசியோதெரபி கல்லுாரி சார்பில் மருத்துவ முகாம், புதுச்சேரி கடற்கரை, காந்தி சிலை அருகில் நடந்தது.

கல்லுாரி நிறுவனர் ஜெகத்ரட்சகன் எம்.பி., பாரத் கல்வி குழும தலைவர் சந்திப் ஆனந்த், நிர்வாக இயக்குனர் ஸ்வேதா சந்திப் ஆனந்த் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நடந்த முகாமிற்கு, மருத்துவக் கல்லுாரி முதல்வர் ஜெயலட்சுமி, மருத்துவ கண்காணிப்பாளர் ஆசையாஸ் போஸ்கோ, நிர்வாக இயக்குனர் அன்பு, பிஸியோதெரபி கல்லுாரி முதல்வர் வேல்முருகன் ஆகியோரின் முன்னிலையில் முகாம் நடைபெற்றது.

முகாமில் பொது மருத்துவம், எலும்பு மற்றும் மூட்டு மருத்துவம், இயன் முறை மருத்துவம் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. உடற்பயிற்சி ஆலோசனையுடன் முக்கியத்துவமும் இயன்முறை மருத்துவர்களால் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டது.  ரத்தஅழுத்தம் , நீரிழிவு நோய் பரிசோதனை , ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை குறித்த ஆலோசனை வழங்கப்பட்டது.  முகாமில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, பயனடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us