/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆச்சாரியா குழுமத்தில் உலக சாதனை நிகழ்வு
/
ஆச்சாரியா குழுமத்தில் உலக சாதனை நிகழ்வு
ADDED : பிப் 08, 2025 06:06 AM

புதுச்சேரி: புதுச்சேரி, ஆச்சாரியா பள்ளி குழுமம், கலாம் உலக சாதனை புத்தகம் சார்பில் மாணவர்கள் பங்கேற்ற உலக சாதனை நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு ஆச்சாரியா குழும தலைவர் டாக்டர் அரவிந்தன் தலைமை தாங்கினார். இதில், புதுச்சேரி சைபர் கிரைம் எஸ்.பி., பாஸ்கரன் பங்கேற்று, மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். ஆசிரியைகள் நித்யா செந்தில்குமார், திவ்யபாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
உலக சாதனை நிகழ்ச்சியில், பள்ளியின் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று, 45 வகையான தனித் திறமைகளை வெளிப்படுத்தினர்.
மாணவர்களின் உலக சாதனை முயற்சிக்கு உறுதுணையாக இருந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், பயிற்சியாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இதுபோன்ற மாணவர்களின் சாதனை நிகழ்வுகள் எதிர்காலத்தில் அவர்களுக்கு, உற்சாகம் மற்றும் நம்பிக்கையை அளிக்கும் என ஆச்சாரியா குழும தலைவர் அரவிந்தன் தெரிவித்தார்.