ADDED : மார் 28, 2026 11:12 PM

புதுச்சேரி: புதுச்சேரி தொழில் நுட்ப பல்கலைக் கழக சிவில் பொறியியல் துறை மற்றும் இந்திய ஆலோசனை சிவில் பொறியாளர்கள் சங்கம் சார்பில் உலக நீர் தினம் கொண்டாடப்பட்டது.
பல்கலைக் கழக சிவில் பொறியியல் துறை கருத்தரங்க கூடத்தில், நீர் மற்றும் பாலினம் என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில், புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் மோகன் தலைமை தாங்கினார். சிவில் பொறியியல் துறைத்தலைவர் ராமகிருஷ்ணா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அண்ணா பல்கலைக்கழக நீர்வள மையத்தின் இயக்குநர் சரவணன் சிறப்புரையாற்றினார்.
இந்திய ஆலோசனை சிவில் பொறியாளர்கள் சங்கத்தின் புதுச்சேரி மையத்தின் செயலாளர் சுரேஷ் குமார் பேசினார். நிகழ்ச்சியில், மாணவர் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்ட உதவித்தொகை துவக்கி வைக்கப்பட்டது. பேராசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
