தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மொரட்டாண்டியில் ஆராதனை விழா

மொரட்டாண்டியில் ஆராதனை விழா

மொரட்டாண்டியில் ஆராதனை விழா


UPDATED : அக் 08, 2026 01:21 AM

ADDED : அக் 08, 2026 12:02 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 01:21 AM ADDED : அக் 08, 2026 12:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பிரம்மஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் 31வது ஆண்டு ஆராதனை விழா நேற்று நடந்தது.

மொரட்டாண்டி டோல்கேட் அருகில், உள்ள விஸ்வரூப மகா சனீஸ்வர பகவான் கோவிலில், லலிதாம்பிகை வேதசிவாகம டிரஸ்ட் சார்பில், தட்சிணாமூர்த்தி 18 சித்தர் மகா மண்டபத்தில் பிரம்மஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் ஆராதனை விழா நேற்று காலை 9:00 மணிக்கு நடந்தது.

வச்சலா சிதம்பர குருக்கள் தலைமை தாங்கினார். தெடார்ந்து கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் திருவுருவச்சிலைக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதையடுத்து, கீதாராம சாஸ்திரிகள் தலைமையில், மகா கணபதி ேஹாமம், மிருத்யுஞ்ஜய ேஹாமம், ஆயுஷ்ய ேஹாமம், நவக்கிரக ேஹாமம் நடந்தது. காலை 10:00 மணிக்கு மொரட்டாண்டி பிரத்யங்கரா காளி கோவில் நிறுவனர் நடாத்துர் ஜனார்த்தன சுவாமிகள், சித்தார்த், ஸ்ரீனிவாசன், கல்யாணம், வேதராமன் நாகராஜன், சுவாமிநாதன், முரளிராஜகோபால், ஆனந்தபத்மநாபன், சீத்தாராமன், ரகோத்தமன், ரவி, கிருஷ்ணமூர்த்திகள் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தி, புஷ்ப வழிபாடு நடந்தது.

11:30 மணிக்கு சாம வேத பாராயணம், 12:00 மணிக்கு குரு ஆராதனை நிகழ்ச்சி நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us