/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மல்யுத்த போட்டி: பதக்கம் வழங்கும் விழா
/
மல்யுத்த போட்டி: பதக்கம் வழங்கும் விழா
ADDED : டிச 26, 2024 05:54 AM

புதுச்சேரி: புதுச்சேரி அமெச்சூர் மல்யுத்த சங்கம் சார்பில் மாநில அளவிலான மல்யுத்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் வழங்கும் விழா நடந்தது.
உப்பளம், ராஜிவ்காந்தி விளையாட்டு அரங்கில் நடந்த மாநில அளவிலான மல்யுத்த போட்டியில், புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் பகுதியை சார்ந்த 850க்கு மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசு மற்றும் பதக்கம் வழங்கும் விழா நடந்தது. புதுச்சேரி மல்யுத்த சங்க நிறுவன செயலாளர் வினோத் தலைமை தாங்கினார்.
புதுச்சேரி ஒலிம்பிக் சங்க செயலாளர் தனசேகர், சங்க துணை தலைவர் திருமுருகன், தொழிலதிபர் செந்தில்குமார், சங்கர், உயர்கல்வி இயக்குனர் ஆதவன் ஆகியோர் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கம் வழங்கி, பாராட்டினர்.
துணை செயலாளர்கள் ஜெகன், தாமோதரன், பொருளாளர் சோமசுந்தரம், நிர்வாகிகள் செல்வம், வீரப்பன், ஜான், வசந்த், ஷாலினி, காமேஷ், அஸ்வின், நித்தீஷ், அரிகரன், வினிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

