/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மல்யுத்த போட்டி பரிசளிப்பு விழா
/
மல்யுத்த போட்டி பரிசளிப்பு விழா
ADDED : செப் 10, 2025 11:26 PM

புதுச்சேரி: மாநில அளவிலான மல்யுத்த போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம் பரிசு வழங்கினார்.
புதுச்சேரி அமெச்சூர் மல்யுத்த சங்கம் சார்பில் 7வது மாநில அளவிலான மல்யுத்த போட்டி உப்பளம் விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு புதுச்சேரி மல்யுத்த சங்க நிறுவன செயலாளர் வினோத் தலைமை தாங்கினார். போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு அமைச்சர் நமச்சிவாயம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார். விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ ., பாஸ்கர், கர்லிங் சங்க தலைவர் சரவணன், பிரைனி ப்ளூம்ஸ் பள்ளி தாளாளர் அருண்குமார், முருகன், திவாகர் மேனன், மல்யுத்த துணை செயலாளர் ஜெகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை சங்க பொருளாளர் சோமசுந்தரம் செய்திருந்தார்.