sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 ஏனாம் வேட்பாளர் அறிவிப்பு: ரங்கசாமியால் கூட்டணியில் குழப்பம்

/

 ஏனாம் வேட்பாளர் அறிவிப்பு: ரங்கசாமியால் கூட்டணியில் குழப்பம்

 ஏனாம் வேட்பாளர் அறிவிப்பு: ரங்கசாமியால் கூட்டணியில் குழப்பம்

 ஏனாம் வேட்பாளர் அறிவிப்பு: ரங்கசாமியால் கூட்டணியில் குழப்பம்


ADDED : மார் 16, 2026 06:43 AM

Google News

ADDED : மார் 16, 2026 06:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: 'ஏனாம் தொகுதியில் என்.ஆர்.காங்., வேட்பாளராக மல்லாடி கிருஷ்ணராவ் நிற்பார்' என, முதல்வர் ரங்கசாமி அறிவித்ததால், தே.ஜ., கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலம், ஏனாம் பிராந்தியத்திற்கு நேற்று சென்ற முதல்வர் ரங்கசாமி, பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார்.

அப்போது என்.ஆர்.காங்., தொண்டர்களும் முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் ஆதரவாளர்களும் முதல்வர் ரங்கசாமியிடம், 'வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ., விற்கு தான் 'சீட்' என்று கூறி வருகின்றனர். உண்மையில் ஏனாம் தொகுதியில் யாருக் கு சீட்டு என, கேட்டனர்.

இதை கேட்டதும் கோபம் அடைந்த முதல்வர் ரங்கசாமி, மேடையிலேயே என்.ஆர்.காங்., கட்சியின் முதல் வேட்பாளர் மல்லாடி கிருஷ்ணாராவ் தான் என அறிவித்தார்.

'வரும் சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்., ஏனாம் தொகுதியில் போட்டியிடும். இதில், யாருக்கும் சந்தேகம் வேண்டாம்' என்றார். மல்லாடி கிருஷ்ணாராவ், கடந்த முறை முதல்வர் ரங்கசாமி போட்டியிடும் வகையில், தொகுதியை விட்டு கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனாம் தொகுதியில் பா.ஜ., ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ., கொல்லப்பள்ளி சீனிவாச அசோக், மீண்டும் சீட்டினை குறிவைத்து பிரசாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில், முதல்வர் ரங்கசாமி, அதிரடியாக ஏனாமில் என்.ஆர்.காங்., மீண்டும் போட்டியிடும் என கூறியிருப்பதால், புதுச்சேரி தே.ஜ., கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us