/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
3ம் வட்ட பள்ளிகளுக்கு இடையே யோகாசன சாம்பியன்ஷிப் போட்டி
/
3ம் வட்ட பள்ளிகளுக்கு இடையே யோகாசன சாம்பியன்ஷிப் போட்டி
3ம் வட்ட பள்ளிகளுக்கு இடையே யோகாசன சாம்பியன்ஷிப் போட்டி
3ம் வட்ட பள்ளிகளுக்கு இடையே யோகாசன சாம்பியன்ஷிப் போட்டி
ADDED : நவ 21, 2024 05:26 AM

பாகூர்: பள்ளி கல்வி மூன்றாம் வட்டம் பள்ளிகளுக்கு இடையிலான யோகாசன சாம்பியன்ஷிப் போட்டி, பாகூர் அடுத்த குடியிருப்புப்பாளையம் அகரம் ஸ்காலர்ஸ் அகாடமி பள்ளியில் நடந்தது.
பள்ளித் தாளாளர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார். ஆசிரியை இலக்கியா வரவேற்றார். ஏ.ஜெ. மேல்நிலைப் பள்ளி முதல்வர் ரங்கநாதன், ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் ஆறுமுகம், மூன்றாம் வட்ட பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளின் செயலாளர் நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளி உடற் கல்வி விரைவுரையாளர் பிரகாஷ் ஆகியோர் யோகாசன போட்டியைத் துவக்கி வைத்தனர்.
இப்போட்டியில், மூன்றாம் வட்டத்திற்குட்பட்ட 28 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து 110 மாணவர்கள், 80 மாணவியர் பங்கேற்றனர்.
வீராம்பட்டினம் அரசுப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஜெயசுந்தரி, அரியாங்குப்பம் தந்தை பெரியார் அரசுப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் நித்யா, பாகூர் கஸ்துாரிபாய் காந்தி அரசுப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ரகு, ஏம்பலம் மறைமலை அடிகள் அரசுப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சந்தோஷி, அபிேஷகப்பாக்கம் சேத்திலால் அரசுப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் இளவரசன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.
14 வயதிற்குட்பட்டோர் பிரிவில், குடியிருப்புப்பாளையம் அகரம் ஸ்காலர்ஸ் அகாடமி பள்ளி முதலிடம், சேலியமேடு சுவிஞரேறு வாணிதாசனார் அரசு உயர்நிலைப் பள்ளி இரண்டாம் இடம், பாகூர் அரசு ஆண்கள் நடுநிலைப் பள்ளி மூன்றாம் இடம் பிடித்தன.
உடற்கல்வி விரைவுரையாளர்கள் பழனி, முரளிதரன், நாராயணசாமி, சிவரன்ஜன், உடற்கல்வி ஆசிரியர் தணிகைக்குமரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். அகரம் ஸ்காலர்ஸ் அகாடமி பள்ளி ஆசிரியை ஏகமதி தொகுப்புரையாற்றினார்.
ஆசிரியை சங்கீதா நன்றி கூறினார்.