/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சின்ன முதலியார் சாவடியில் யோகாசன போட்டி
/
சின்ன முதலியார் சாவடியில் யோகாசன போட்டி
ADDED : ஜன 15, 2026 07:56 AM

புதுச்சேரி: புதுச்சேரி யோகாசன விளையாட்டு சங்கம் மற்றும் பாண்டிச்சேரி ஒலிம்பிக் சங்கத்துடன் இணைந்து பாண்டிச்சேரி இளைஞர்களுக்கான யோகா போட்டி, அகில உலக யோகா கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் சின்னமுதலியார் சாவடியில் நடந்தது.
யோகாசனத்தை போட்டி விளையாட்டாக ஊக்குவித்தல், இளைஞர்களின் பங்கேற்பை ஊக்குவித்தல் மற்றும் மன ஒழுக்கத்தை வளர்த்து கொள்வதை அடிப்படையாக கொண்ட இப்போட்டியை, சித்தர் பூமி யோகாசன விளையாட்டு சங்கத் தலைவர் ஆனந்த பாலயோகி பவனானி துவக்கி வைத்தார்.
சங்க செயலாளர் தயாநிதி, இணை செயலாளர் பாலாஜி ஒருங்கிணைந்து யோகாசன போட்டிகள் நடத்தினர்.
இளைஞர்களுக்கான யோகாசனப் போட்டியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துக் கொண்டனர்.

