/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளியில் யோகா தின விழா
/
ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளியில் யோகா தின விழா
ADDED : ஜூன் 22, 2025 01:59 AM

புதுச்சேரி: புதுச்சேரி ஆதித்யா வித்யாஷ்ரம் உறைவிடப் பள்ளி மற்றும் இந்திய ஆயுஷ் அமைச்சகம் இணைந்து 4,000 மாணவர்கள் பங்கேற்ற மெகா யோகா தின விழாவை நடத்தின.
காலை 6:30 மணி முதல் 9:30 மணி வரை நடந்த யோகாவில், மூன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் 4,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
முன்னதாக கோவையில் நடந்த 3வது ஓப்பன் நேஷனல் சேலன்ஞ்ச் -2025 யோகாப் போட்டியில் சுழற்கோப்பையை வென்ற புதுச்சேரி ஆதித்யா மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.
தொடர்ந்து ஆதித்யா பள்ளி யோகாசன ஆசிரியர்கள் முன்னிலையில், தொடர்ந்து மூன்று மணி நேரம் 17வகை யோகாசனம், 3 வகை பிராணாயாமம், கபாளபதி, தியான முத்திரை மற்றும் சங்கல்பா பயிற்சிகள் செய்து காண்பித்தனர்.
ஆதித்யா பள்ளி நிறுவனர் ஆனந்தன், தாளாளர் அசோக் ஆனந்த், வித்ய நாராயணா அறக்கட்டளை ட்ரஸ்டி அனுதா பூனமல்லி ஆகியோர் யோகாசன நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களை பாராட்டினர்.
இதில், பள்ளி முதல்வர், இயக்குநர்கள், பொறுப்பாசிரியர்கள் மற்றும் ஆசிரியகள் பலர் கலந்து கொண்டனர்.