தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நோய்களை குணப்படுத்தும் யோகா சுவாச கோளாறுகளுக்கான சிகிச்சை முறை

 நோய்களை குணப்படுத்தும் யோகா சுவாச கோளாறுகளுக்கான சிகிச்சை முறை

 நோய்களை குணப்படுத்தும் யோகா சுவாச கோளாறுகளுக்கான சிகிச்சை முறை


ADDED : ஜன 29, 2026 05:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 29, 2026 05:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆஸ்த்துமா, நாட்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி, எம்பிஸிமா போன்ற நாட்பட்ட சுவாச அடைப்பு கோளாறுகளை கட்டுப்படுத்துவதில் யோகா முக்கிய பங்கு வகிக்கிறது. பல்வேறு நாசி ஒவ்வாமைகளை குறைக்கவும், அனைத்து நிலைகளில் சுவாச செயல்பாட்டை அதிகரிக்கவும் உதவுகிறது.

சுவாச பிரச்னைகளுக்கு தீர்வு காண உதவும் யோகா மற்றும் அதன் செயல் முறைகளை இனி பார்ப்போம்.

உஸ்ட்ராசனம் வஜ்ராசனத்தில் உட்காரவும். மூச்சை இழுத்துக் கொண்டே முட்டி போட்டு நிமிர்ந்து இருக்கவும். பின் மெதுவாக பின்னால் சாய்ந்து, கைகளால் கணுக்காலை பிடிக்கவும். கீழ் முதுகை முன்னோக்கி தள்ள வேண்டும்.

இந்த இறுதி நிலையை அடைந்தவுடன், உதரவிதானத்தின் இயக்கங்கள் பற்றிய விழிப்புணர்வோடு 6 முறை வலிமையான பாஸ்த்ரிகாக்கள் செய்ய வேண்டும்.

மூக்கு வழியாக மூச்சை உள்ளிழுத்து, வாய் வழியாக விடவும். பின் மூச்சை விட்டுக் கொண்டே, மெதுவாக மீண்டும் வஜ்ரா ஆசனத்திற்கு வரவும். இப்பயிற்சியை பலமுறை செய்யவும்.

சீரி க்ரியா சதுஷ் பாத ஆசனத்தில் இருந்தபடி, மெதுவாகவும் மற்றும் ஆழமாக மூச்சை இழுத்துக் கொண்டு, வலது காலை நேராக பின்னால் நீட்டி முடிந்தவரை உயர்த்தி, ஷரபாசனம் செய்வது போல் மேலே பார்க்கவும்.

மூச்சை விட்டுக் கொண்டு, கால்களை மடித்து முதுகை வளைத்து, வலது முழங்காலை மார்பின் கீழ் இழுத்து, நெற்றியால் முழங்காலைத் தொடவும். இந்த முழு சுழற்சியை வலது பக்கத்தில் மூன்று முறை செய்துவிட்டு, சதுஷ்பாத ஆசனத்திற்கு திரும்பவும். இதேபோல் இடது பக்கம் மூன்று முறை செய்யவும்.

பிற யோகாக்களை அடுத்த வாரம் பார்ப்போம்...

பலன்கள்

முதுகுத் தண்டு ஆரோக்கியம் மேம்படும். உதரவிதானத்தை வலுப்படுத்துகிறது. உடல் சக்தி, தாங்கும் திறன் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. உதரவிதானத்தை இயக்கி வயிற்று உறுப்புகளை மசாஜ் செய்து துாண்டுகிறது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us