தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நோய்களை குணப்படுத்தும் யோகா சுவாச கோளாறுகளுக்கான சிகிச்சை முறை

 நோய்களை குணப்படுத்தும் யோகா சுவாச கோளாறுகளுக்கான சிகிச்சை முறை

 நோய்களை குணப்படுத்தும் யோகா சுவாச கோளாறுகளுக்கான சிகிச்சை முறை


ADDED : பிப் 05, 2026 06:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 05, 2026 06:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சுவாச கோளாறுகளுக்கான யோகா பிரிவில் கடந்த வாரம் உஸ்ட்ராசனம், சீரி க்ரியா யோகா செய்முறைகளை பார்த்தோம். இனி மத்ஸ்ய ஆசனம், முக பஸ்திரிகா மற்றும் சூரிய நாடி பிராணாயாமம் செய்முறைகளை இந்த வாரம் பார்ப்போம்.

மத்ஸ்ய ஆசனம் ஷாவா ஆசனத்தில் நேராக அமர்ந்து, கால்களை முன்னாள் நீட்டவும். பின், கால்களை மடக்கி சுகாசனம் அல்லது பத்ம ஆசனத்தில் அதாவது வலது பாதத்தை இடது தொடை மீதும், இடது பாதத்தை வலது தொடை மீது வைத்து உட்காரவும்.

கைகளை உடலுடன் சேர்த்து, உள்ளங்கைகளை தரையில் படுமாறு வைக்கவும். முழங்கைகளை வளைத்து, முழங்கை மூட்டு தரையோடு இருக்கும் வகையில் பின்னோக்கி வளையவும். இந்த நிலையை மேற்கொள்ளும் போது உங்கள் கைகள் மற்றும் முழங்கை மூட்டை ஆதரவிற்கு பயன்படுத்திக் கொள்ளவும். தலை தளர்வாக தரையை தொடும் வரை சாயவும்.

தோள்களை தரையில் உயர்த்தி முழு உடல் எடையையும் தலையில் தாங்கவும். முழங்கை மூட்டை தரையில் வைத்து கைகளை தொடை மேல் வைக்கவும். முடிந்தால் கை விரல்களால், கால் விரல்களை பிடிக்கவும். பின் ஆழமாக சுவாசிக்கவும். இந்த நிலையில் குறைந்தது 3 முதல் 6 சுற்றுகள் ஆழமாக சுவாசிக்கவும். பின்னர் உத்தானாசனத்தில் முன்னோக்கி கால்களை நீட்டி ஷாவாசனத்தில் சற்ற நேரம் ஓய்வெடுக்கவும்.

முக பஸ்திரிகா வஜ்ரா ஆசனத்தில் அமர்ந்து, நுரையீரலின் மூன்று பகுதிகளையும் நிரப்பும் வகையில் ஆழ்ந்து மூச்சை இழுக்கவும். வாயை உயர்த்தி காக்கி முத்ராவை செய்யவும். தலையை மெதுவாக தரையில் கொண்டு வரும்போது 'உஸ்' சத்தத்துடன் மூச்சை வெளியேற்ற தொடங்கவும். ஆழமாக மூச்சை உள்ளிழுத்துக் கொண்டு மெதுவாக வஜ்ராசனத்திற்கு வரவும். இப்பயிற்சியை ஒவ்வொரு அமர்விலும் 3 முதல் 9 முறை செய்யவும்.

தேவையான எண்ணிக்கையிலான முக பஸ்திரிகா செய்த பின், முட்டிக்கு இடையில் மூக்கை வைத்து தர்மிகா ஆசனத்தில் ஓய்வெடுக்கவும். கைகளை உடலுடன் சேர்த்து, குதிகால்களை பிடிக்கவும். முழங்கை மூட்டு தரையில் ஓய்வெடுக்கட்டும்.

நெற்றி தரையைத் தொடும் இடத்தில் கவனம் செலுத்தி, நினைவில் கொள்ள விரும்புவதை காட்சிப்படுத்துங்கள். பின், மெதுவாக மூச்சை உள்ளிழுத்துக் கொண்டு வஜ்ராசனத்திற்கு வரவும்.

சூரிய நாடி பிராணாயாமம் வஜ்ராசனத்தில் அமர்ந்து வலது கையில் நாசிகா முத்திரையை செய்யவும். கட்டை விரலால், இடது நாசியை மூடி வலது நாசி வழியாக நான்கு எண்ணிக்கைக்கு மெதுவாக உள்ளிழுக்கவும். பின், அதே வலது நாசி வழியாக 8 எண்ணிக்கைக்கு மூச்சை வெளியே விடவும்.

பயிற்சி முழுவதும் இடது நாசியை மூடி வைக்கவும். குறைந்தபட்சம் 9 சுற்றுகளுக்கு சூரிய பேதன பிராணாயாமத்தை செய்யவும்.

இனி கழுத்து மற்றும் மேல் முதுகு வலிக்கான யோகா சிகிச்சை முறைகளை அடுத்த வாரம் பார்ப்போம்...

பயன்கள்

மத்ஸ்ய ஆசனம்: சளியை குறைக்கும். தவறான சுவாசப் பழக்கத்தை சரி செய்ய உதவும். இதய செயல்பாட்டின் திறன் அதிகரிக்கும். முக பஸ்திரிகா: நுரையீரல் கோளாறு உள்ளவர்களுக்கு போதுமானதாக இல்லாத காற்றை வெளியேற்றும் சக்தியை மேம்படுத்த உதவுகிறது. சூரிய நாடி பிராணாயாமம்: நுரையீரல் அழற்சி நோயாளிகளுக்கு மூச்சுக்குழாய் அழற்சியில் இருந்து விடுபட உதவுகிறது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us