தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ யோகாசன சாம்பியன்ஷிப் போட்டி பரிசளிப்பு விழா

யோகாசன சாம்பியன்ஷிப் போட்டி பரிசளிப்பு விழா

யோகாசன சாம்பியன்ஷிப் போட்டி பரிசளிப்பு விழா


ADDED : செப் 19, 2024 01:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 19, 2024 01:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சித்தர் பூமி யோகாசன விளையாட்டு சங்கம் மற்றும் யோகாசன பாரத் இணைந்து, மாநில அளவிலான யோகாசன சாம்பியன்ஷிப் போட்டி கிருமாம்பாக்கம் பாலாஜி வித்யா பீத் பல்கலை கழகத்தில் அமைந்துள்ள ஐ .எஸ்.சி.ம். வளாகத்தில் நடைபெற்றது.

5 பிரிவுகளாக நடந்த போட்டியில், மாவட்ட அளவில் வெற்றி பெற்ற 135 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா, புதுச்சேரி அய்யனார் நகரில் அமைந்துள்ள யோகாஞ்சலி நாட்டியாலயத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு, சித்தர் பூமி யோகாசன விளையாட்டு சங்கம் தலைவர் ஆனந்த பாலயோகி பவனானி முன்னிலை வகித்தார். சங்க செயலாளர் தயாநிதி வரவேற்றார். முதன்மை விருந்தினராக நேரு எம்.எல்.ஏ., ஒலிம்பிக் விளையாட்டு சங்க பொது செயலாளர் தனசேகர், சித்தர் பூமி யோகாசன விளையாட்டு சங்க தலைவர் ஆனந்த பாலயோகி பவனானி, கீதானந்த யோகா மையம் ஆஸ்திரேலியா முரளிதரன் ஆகியோர் மாணவர்களை பாராட்டி பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

சிறப்பு விருந்தினராக சங்க மூத்த தலைவர் கஜேந்திரன், சங்க துணைத் தலைவர் தேவசேனா பவனானி, சங்க பொருளாளர் சண்முகம், லலிதா சண்முகம் கலந்துக் கொண்டு வாழ்த்துரை வழங்கினர். விழாவில், யோகா நடுவர்கள், ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவ மாணவிகளின் யோகா செயல் முறை நடந்தது.

சங்க துணை செயலாளர் டாக்டர் பாலாஜி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us