/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
யோகாசன சாம்பியன்ஷிப் போட்டி பரிசளிப்பு
/
யோகாசன சாம்பியன்ஷிப் போட்டி பரிசளிப்பு
ADDED : ஆக 14, 2025 01:13 AM

புதுச்சேரி : புதுச்சேரி சித்தர் பூமி யோகாசன விளையாட்டு சங்கம் மற்றும் யோகாசன பாரத் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான யோகாசன சாம்பியன்ஷிப் போட்டி, இ.சி.ஆரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு சித்தர் பூமி யோகாசன விளையாட்டு சங்கத் தலைவர் ஆனந்த பாலயோகி பவனானி மற்றும் சங்க நிர்வாகிகள் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார்கள். பொதுச் செயலாளர் தயாநிதி யோகாசன செயல் முறைக ளை விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து நடந்த போட்டியில் 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 5 முதல் 10 வயதிற்கு உட்பட்டோர், சப் ஜூனியர் (10 முதல் 14 வயதுவரை), ஜூனியர் (14 முதல் 18 வயதுவரை), சீனீயர் (18 முதல் 28 வயது வரை) மாஸ்டர் (28 முதல் 55 வயது வரை) ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.
விழாவில் சிறப்பு விருந்தினர்களான சபாநாயகர் செல்வம், நேரு எம்.எல்.ஏ., புதுச்சேரி ஒலிம்பிக் யோகாசன விளையாட்டு சங்க பொதுச் செயலாளர் தனசேகர் கலந்து கொண்டனர்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சங்க துணைத் தலைவர் தேவசேனா பவனானி, மூத்த சங்க துணைத் தலைவர் கஜேந்திரன், பொருளாளர் சண்முகம், சங்க உறுப்பினர் லலிதா ஆகியோர் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினர். தொடர்ந்து போட்டியில் பங்கேற்ற யோகா ஆசிரியர்கள் மற்றும் நடுவர்கள் கவுரவிக்கப்பட்டனர். சங்க துணைச் செயலாளர் பாலாஜி நன்றி கூறினார்.