sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

போலீஸ் எஸ்.ஐ., கான்ஸ்டபிள் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

/

போலீஸ் எஸ்.ஐ., கான்ஸ்டபிள் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

போலீஸ் எஸ்.ஐ., கான்ஸ்டபிள் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

போலீஸ் எஸ்.ஐ., கான்ஸ்டபிள் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்


ADDED : ஆக 13, 2025 05:45 AM

Google News

ADDED : ஆக 13, 2025 05:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரி போலீஸ் துறையில் காலியாக உள்ள 70 சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 148 போலீஸ் கான்ஸ்டபிள்கள் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் நடந்த சட்டசபை கூட்டத் தொடரில், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேசுகையில், போலீஸ் துறையில் காலியாக உள்ள சப் இன்ஸ்பெக்டர், காவலர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்தார்.

இந்நிலையில், போலீஸ் துறையில் காலியாக உள்ள 70 சப் இன்ஸ்பெக்டர்கள் 148 கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தகுதியும், விருப்பம் உள்ள புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்கள் இன்று 13ம் தேதி காலை 10:00 மணி முதல் வரும் செப்டம்பர் 12ம் தேதி மாலை மாலை 3:00 மணிக்குள் https://recruitment.py.gov.in என்ற அரசு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இட ஒதுக்கீடு விபரம் வருமாறு:

70 எஸ்.ஐ., பணியிடங்கள்: சப் இன்ஸ்பெக்டர் 70 பணியிடங்களில் பொது பிரிவு-31; எஸ்.சி., -11; ஓ.பி.சி.,-7; எம்.பி.சி., 12; பி.சி.எம்.,-1; இ.பி.சி.,-1; இ.டபுள்யூ.எஸ்.,-7 என இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டள்ளது. இதில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடாக பொது 12; எஸ்.சி.,-3; ஓ.பி.சி.,-2; எம்.பி.சி.,4; இ.டபுள்யூ.எஸ்., -2 என இட துக்கீடு வழங்கப்பட்டுள்ளது.சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது 12.9.25 அன்று 20 முதல் 27 வயதிற்கு உட்பட்டவாரக இருக்க வேண்டும்.

148 கான்ஸ்டபிள் பணியிடங்கள் கான்ஸ்டபிள் பிரிவில், ஆண்களுக்கான 100 பணியிடங்களில், பொது பிரிவினர்-39; எம்.பி.சி.,-18; ஓ.பி.சி.,-11; எஸ்.சி.,-16; இ.பி.சி.,-2; பி.சி.எம்.,-2; எஸ்.டி.,-1; பி.டி.,-1; இ.டபுள்யூ.எஸ்., -10 என இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கான 48 பணியிடங்களில், பொது பிரிவினர்-24; எம்.பி.சி.,-8; ஓ.பி.சி.,-5; எஸ்.சி.,-7; இ.டபுள்யூ.எஸ்.,-4 என என இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 148 பணியிடங்களில், முன்னாள் படைவீரர் பிரிவிற்கு 14 இடங்கள், விளையாட்டு வீரர் பிரிவிற்கு 7 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்கு பிளஸ் 2 அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது, 12.9.25 அன்று 22 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். எம்.பி.சி., ஓ.பி.சி., இ.பி.சி., பி.சி.எம்., மற்றும் பி.டி., பிரிவினருக்கு 3 வயதும், எஸ்.சி.,-எஸ்.டி., பிரிவினருக்கு 5 வயது தளர்வு உண்டு.

பெண்கள் பிரிவில் விதவை, விவாகரத்து பெற்றோர், கணவரை பிரிந்து மறுமணம் செய்து கொள்ளதா பொது பிரிவினர் 35 வயதினரும், எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினர் 40 வயது மிகாமல் இருக்க வேண்டும்.

உடல் தகுதியில், ஆண்கள் 165 செ.மீ., குறையாமலும், பெண்கள் 154 செ.மீ., உயரம் இருக்க வேண்டும்.

ஆண்கள் மார்பளவு 81 முதல் 86 செ.மீ., இருக்க வேண்டும். 5 செ.மீ., விரிவடைய வேண்டும். பெண்களுக்கு மார்பளவு கிடையாது.

எடை அளவு ஆண்களுக்கு உடல் நிறை குறியீடு (பி.எம்.ஐ.,) அளவின்படி 18.50 முதல் 29.9வரை இருக்கலாம். பெண்கள் 45 கிலோ எடை இருக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us