/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டேராடூன் ராணுவ கல்லுாரியில் 8ம் வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம்
/
டேராடூன் ராணுவ கல்லுாரியில் 8ம் வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம்
டேராடூன் ராணுவ கல்லுாரியில் 8ம் வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம்
டேராடூன் ராணுவ கல்லுாரியில் 8ம் வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம்
ADDED : பிப் 08, 2025 05:57 AM
புதுச்சேரி: டேராடூன் ராணுவ கல்லுாரியில் எட்டாம் வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள இந்திய தேசிய ராணுவ கல்லுாரியில் எட்டாம் வகுப்பில் சேர்ந்து படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. நுழைவு தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் 02.01.2013க்கு முன்னரும், 01.07.2014க்கு பின்னரும் பிறந்திருக்கக் கூடாது. மாணவர்கள் இக்கல்லுாரியில் சேரும் போது ஏழாம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது தேர்ச்சி பெற்றவராகவோ இருக்க வேண்டும்.
புதுச்சேரி மாநில மாணவ, மாணவிகளுக்கு எழுத்துத் தேர்வு, வரும் ஜூன் 1ம் தேதி புதுச்சேரி, அண்ணா நகர், காமராஜர் நுாற்றாண்டு கல்வித் துறை வளாகத்தில் நடக்கிறது.
காலை 9:30 மணி முதல் 11.00 வரை கணிதத் தேர்வு, மதியம் 12:00 மணி முதல் 1:00 வரை பொது அறிவுத் தேர்வு, பிற்பகல் 2:30 மணி முதல் மாலை 4:30 வரை ஆங்கில தேர்வு நடைபெறும்.
விண்ணப்பங்களை www.rimc.gov.in என்ற வலைதளத்தில் பொதுப்பிரிவினர் ரூ.600, அட்டவணை இனத்தவர் மற்றும் பழங்குடியினர் அதற்கான ஜாதி சான்றிதழுடன், ரூ.555 செலுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பணம் செலுத்தியதற்கான ரசீது மற்றும் முகவரியை குறிப்பிட்டு விரைவு தபால் மூலம், தி ராஷ்ட்ரிய இந்தியன் மிலிட்ரி காலேஜ், கர்கி கண்டோன்மென்ட், டேராடூன், உத்தராகண்ட்- 248003 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்கள், 30.03.2025ம் தேதிக்குள், இணை இயக்குனர் தேர்வு பிரிவு, நான்காம் தளம், காமராஜர் நுாற்றாண்டு கல்வி வளாகம், அண்ணா நகர் ,புதுச்சேரி--605005 என்ற முகவரிக்கு வந்து சேரவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது