/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வீட்டில் இருந்தபடியே ஓட்டு போட விண்ணப்பிக்கலாம்
/
வீட்டில் இருந்தபடியே ஓட்டு போட விண்ணப்பிக்கலாம்
ADDED : மார் 18, 2024 03:42 AM
புதுச்சேரி : வீட்டில் இருந்தபடியே ஓட்டளிக்க விரும்பும் வாக்காளர்கள், தேர்தல் அறிவிக்கப்பட்ட 5 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மாவட்ட தேர்தல் அதி காரி குலோத்துங்கன் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பு;
தேர்தல் ஆணையம், லோக்சபா தேர்தலில் ஓட்டு அளிக்க வயது முதிர்ந்தவர்கள் (85 வயது மேற்பட்டவர்கள்) மற்றும் மாற்றுத் திறனாளிகள் (40 சதவீதம் மேற்பட்டவர்கள்) வீட்டில் இருந்தபடியே தபால் ஓட்டு மூலம் ஓட்டளிக்க வசதியை வழங்கியுள்ளது.
தேர்தல் தேதி அறிவித்த தேதியில் இருந்து 5 நாட்களுக்குள் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம்.
இரண்டு ஓட்டுச்சாவடி அலுவலர்கள், ஒரு வீடியோ கிராபர் மற்றும் ஒரு பாதுகாவலர் அடங்கிய ஓட்டுப்பதிவு குழுவானது வாக்காளரின் வீட்டிற்கு சென்று, வாக்காளரை தபால் ஓட்டுச்சீட்டில் வாக்களிக்க செய்து ஓட்டுப்பதிவின் ரகசியத்தை காப்பர்.
விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட மொபைல் எண்ணில் குறுஞ்செய்தி, தபால் அல்லது பிஎல்ஓ மூலமாக ஓட்டுப்பதிவு குழு வருகை தரும் தேதி மற்றும் நேரம் குறித்து வாக்காளர்களுக்கு முன்னரே தெரிவிக்கப்படும்.
தபால் ஓட்டு மூலம் வீட்டில் வாக்களிக்கும் வசதியை தேர்வு செய்பவர்கள் ஓட்டுப்பதிவு நாளில் நேரடியாக ஓட்டுச்சாவடியில் ஓட்டுப்போட முடியாது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

