/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'அச்சமின்றி லஞ்ச புகார் அளிக்க வேண்டும்'
/
'அச்சமின்றி லஞ்ச புகார் அளிக்க வேண்டும்'
ADDED : அக் 25, 2025 11:12 PM
புதுச்சேரி: லஞ்சம் தொடர்பாக பொதுமக்கள் அச்சமின்றி புகார் அளிக்க முன்வர வேண்டும் என, லஞ்ச ஒழிப்பு துறை சீனியர் எஸ்.பி., ஈஷாசிங் தெரிவித் துள்ளார்.
அவர், கூறியதாவது:
புதுச்சேரியில் லஞ்ச ஒழிப்பு துறை முக்கிய பங்கு வகிக்கிறது. சிறிய மாநிலமான புதுச்சேரியில் பொதுப்பணி, வருவாய், போக்குவரத்து என பல துறைகளில் லஞ்சம் வாங்கப்படுகிறது. இதனை பொதுமக்களும் சாதாரணமாக நினைத்துக்கொண்டு கடந்து செல்கின்றனர். எங்களை பொறுத்தவரையில் லஞ்சம் கொடுப்பதும், கேட்பதும் குற்றம். இதற்காகத்தான் ஆண்டு தோறும் லஞ்ச ஒழிப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
லஞ்சம் தொடர்பாக பொதுமக்கள் யார் புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுப்போம். பொதுமக்கள் அச்சமின்றி புகார் அளிக்க முன்வர வேண்டும். லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்பது தான் முக்கியமான கொள்கை. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற் படுத்தப்படும்.
பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் உண்மை தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும். பிறர் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியின் காரண மாக புகார் அளிப்பதை தவிர்க்க வேண்டும். இந்த ஆண்டில் மட்டும் லஞ்சம் தொடர்பாக 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது' என்றார்.பேட்டியின் போது எஸ்.பி., நல்லாம் கிருஷ்ணராயபாபு, இன்ஸ்பெக்டர்கள் தனசேகரன், வெங்கடாசலபதி ஆகியோர் உடனிருந்தனர்.

