ADDED : டிச 29, 2025 05:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாடத்தை முன்னிட்டு கடற்கரையில் கம்புகள் வைத்து தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 8:00 மணியளவில் கடற்கரையில் அமர்ந்திருந்த இளம்பெண் ஒருவர் திடீரென தடுப்பு வேலியை தாண்டி கடலில் இறங்கி தற்கொலைக்கு முயன்றார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வீரமங்கை குழுவினர் இளம்பெண்ணை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், அவர் பாகூர் பகுதியை சேரந்தவர் என்பதும், குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

