/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இளம்பெண்ணின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்கி ஆபாச படம் பதிவேற்றம்; சைபர் கிரைம் போலீஸ் வழக்கு பதிவு

ADDED : ஜன 29, 2024 04:56 AM
புதுச்சேரி : இளம்பெண்ணின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்கி ஆபாச படங்களை பதிவேற்றி மிரட்டிய மர்ம நபர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
புதுச்சேரி மூலக்குளம் பகுதியைச் சேர்ந்த 22 வயது பெண் திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார்.
இவர் கடந்த 5 ஆண்டுகளாக இரண்டு இன்ஸ்டாகிராம் பக்கங்களை பயன்படுத்தி வந்தார். கடந்த 2022ம் ஆண்டு அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை மர்ம நபர்கள் முடக்கம் செய்துள்ளனர். இதை அவர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.
கடந்த ஆண்டு ஆக. 11ம் தேதி இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து அவரது தோழிகளுக்க ஆபசமான தகவல்களும், தான் விபசாரம் செய்வதாக மெசோஜ் சென்றது. தோழிகள்இது தொடர்பாக அப்பெண்ணிடம் தகவல்தெரிவித்தனர். ஆபாசமாக வந்த இன்ஸ்டாகிரம் பக்கத்தை தவிர்த்து மற்றொன்றை மட்டும் பயன்படுத்தி வந்தார்.
கடந்த 26ம் தேதி, அப்பெண்ணை இன்ஸ்டாகிராமில் தொடர்பு கொண்ட மர்ம நபர், மற்ற நபர்களுடன் இருந்த ஆபாச வீடியோக்கள் இருப்பதாகவும், அவற்றை கணவர் நண்பர்களுக்கு அனுப்பி விடுவதாக மிரட்டினார்.
அதுமட்டும் இன்றி அப்பெண்ணின் பெயரில் போலியாக பேஸ்புக் பக்கம் உருவாக்கி அதில் ஆபாச படங்களை பதிவிட்டுள்ளனர்.
இது தொடர்பாக அப்பெண் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.