UPDATED : அக் 07, 2026 01:29 AM
ADDED : அக் 07, 2026 01:26 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: உருளையன்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் போலீசார் நேற்று காலை புதுச்சேரி கோர்ட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்.
அவர்கள் கோர்ட்டிற்கு வரும் பொதுமக்களின் உடமைகளை சோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது புதுச்சேரி காமன் கோவில் தெருவை சேர்ந்த முருகபெருமாள் 40, என்பவரின் உடமைகளை சோதனை செய்த போது, அவர் கஞ்சா இலை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். அவரிடம் இருந்த 8 கிராம் கஞ்சா இலைகளை பறிமுதல் செய்தனர்.
