நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கடற்கரை சாலையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி கடற்கரை சாலையில் அவ்வழியாக செல்லும் பொதுமக்களிடம் வாலிபர் ஒருவர் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டு வருவதாக பெரியகடை போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த குமரவேல், 38; என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.