ADDED : மார் 22, 2026 08:33 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: வீட்டில் குட்கா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
உறுவையாறு, செல்வா நகரில் ஒரு வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக மங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து மங்கலம் சப் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு ஒரு வீட்டில் வாலிபர் ஒருவர் குட்கா விற்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த ஹாஜா மொஹிதீன், 43, என்பது தெரிய வந்தது. அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர். அந்த வீட்டில் இருந்த ஹான்ஸ், கூல் லீப், பான் மாசலா உள்ளிட்ட ரூ. 2 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
