ADDED : ஆக 20, 2026 02:51 PM
விருத்தாசலம்: பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த மாத்துார் கிராமத்தை சேர்ந்தவர் உமர் அலி. இவரது மனைவி ரஹ்மத்துன்னிசா, 29. இவர்கள் தற்போது, விருத்தாசலம் முல்லை நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், இவர்கள் குடியிருக்கும் மேல்மாடியில் புதுப்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜ்குமார் மகன் அரவிந்த, 26. வசித்து வந்தார்.
இவர் கடந்த 2024ம் ஆண்டு தனது தாயார் விஜயலட்சுமிக்கு உடல்நிலை சரியில்லை என கூறி, ரஹ்மத்துன்னிசாவிடம் இரண்டரை சவரன் நகையை கடனாக பெற்று, இதுவரை திருப்பி தராமல் இழுத்தடித்து வந்துள்ளார்.
நகையை திருப்பி தரவில்லை என்றால் போலீசில் புகார் செய்வேன் என ரஹ்மத்துன்னிசா கூறினார்.
இதில், ஆத்திரமடைந்த அரவிந்த் ரஹ்மத்துன்னிசாவை ஆபாசமாக திட்டி, தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து, அரவிந்தனை கைது செய்தனர்.
