ADDED : டிச 26, 2024 05:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: மடுகரை கடை வீதிகளில் ரகளையில் ஈடுப்பட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி போலீஸ் கோட்டர்ஸ் வீதியைச் சேர்ந்தவர் பிரதீப், 21. இவர் நேற்று முன்தினம் மாலை 4:00 மணியளவில் மது குடித்துவிட்டு மடுகரை கடை வீதிகளில் ரகளையில் ஈடுப்பட்டார். தொடர்ந்து பஸ் நிலையத்தில் பஸ்சிற்காக காத்திருந்த பெண்களை பார்த்து ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார். தகவலறிந்த மடுகரை போலீசார் பிரதீப் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.