ADDED : ஜன 06, 2026 04:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பொது இடத்தில் ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காட்டேரிக்குப்பம் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது விழுப்புரம் மாவட்டம் தேர்குணம் பகுதியைச் சேர்ந்த சக்தி 23, என்பவர் மதுபோதையில், புதுச்சேரி- லிங்காரெட்டிப்பாளையம் சிக்னல் அருகில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை பார்த்து ஆபாசமாக பேசிக் ரகளையில் ஈடுபட்டார்.
அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவரை எச்சரித்து அனுப்பினர். இருப்பினும் அவர் தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் நடந்து கொண்டதால் அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

