/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொமக்களுக்கு இடையூறு வாலிபர் கைது
/
பொமக்களுக்கு இடையூறு வாலிபர் கைது
ADDED : மார் 24, 2025 04:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பொது இடத்தில் ஆபாசமாக பாட்டு பாடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கடற்கரை சாலையில், பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில், வாலிபர் ஒருவர் ஆபாசமாக பாட்டு பாடி வருவதாக ஒதியஞ்சாலை போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. அதனை அடுத்து, போலீசார் அங்கு நின்று பாட்டு பாடியவரை பிடித்து விசாரணை செய்தனர்.
அவர், உப்பளம் பகுதியை சேர்ந்த ஸ்டீபன், 31, என்பதும் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.