/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொதுமக்களுக்கு இடையூறு வாலிபர் கைது
/
பொதுமக்களுக்கு இடையூறு வாலிபர் கைது
ADDED : பிப் 02, 2026 03:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: பொது மக்களுக்கு இடையூறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெட்டப்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது ஈரோடு மாவட்டம் கள்ளிப்பட்டி பகுதியைச் சேர்ந்த கவிக்குமார் 21, என்பவர் மது போதையில், நெட்டப்பாக்கம் சந்திப்பில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் இடையூறு செய்து கொண்டிருந்தார்.
ரோந்து பணியில் இருந்த போலீசார் அந்த வாலிபரை எச்சரித்து அனுப்பினர். இருப்பினும் தொடர்ந்து அவர் பொதுமக்களுக்கு இடையூறு செய்து கொண்டிருந்ததால், அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

