ADDED : மார் 17, 2026 04:15 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: பொதுமக்களுக்கு இடையூறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காலப்பட்டு போலீசார் நேற்று காலை 11 மணியளவில் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது தமிழக பகுதியான திண்டிவனத்தைச் சேர்ந்த மூர்த்தி 40, என்பவர் பிம்ஸ் மருத்துவமனை சாலையில் மது போதையில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அந்த வாலிபரை எச்சரித்து அனுப்பினர். அவர் தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூரல் செய்து கொண்டிருந்தார். அதையடுத்து போலீசார் அந்த வாலிபர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
