ADDED : மார் 29, 2026 04:25 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: பொது இடத்தில் தகராறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காலப்பட்டு போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது மாஞ்சாகுப்பம் பகுதியைச் சேர்ந்த குமரன், 34; என்பவர் மது போதையில் கணபதிசெட்டிக்குளம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்து கொண்டும் ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அந்த வாலிபரை எச்சரித்து அனுப்பினர். தொடர்ந்து அவர் இடையூறு செய்து கொண்டு இருந்ததால் அவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
