ADDED : நவ 27, 2024 05:37 AM
அ நிறம் | அளவு
திருக்கனுார் : குடிபோதையில் பொது மக்களிடம் தகராறில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காட்டேரிக்குப்பம் - கூனிமுடக்கு செல்லும் சாலையில் வாலிபர் ஒருவர், குடிபோதையில் அவ்வழியாக செல்லும் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, போதையில் பொது மக்களிடம் தகராறில் ஈடுபட்ட நபரை பிடித்து விசாரித்தனர்.
அவர், பெரும்பாக்கம், குன்னம் கிராமத்தை சேர்ந்த வினோத்குமார், 27; என, தெரியவந்தது. வினோத்குமார் மீது குடிபோதையில் பொது மக்களுக்கு இடையூர் ஏற்படுத்தியதாக போலீசார் வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.
