ADDED : மார் 20, 2026 07:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பொது இடத்தில் ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காலாப்பட்டு போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது விழுப்புரம் மாவட்டம், மொன்னையம் பேட்டை பகுதியைச் சேர்ந்த மோன்தாஸ், 37, என்பவர் பிம்ஸ் மருத்துவமனை சாலையில் மது போதையில் அவ்வழியாக செல்லும் பொதுமக்களை பார்த்து ஆபாசமாக திட்டிக் கொண்டிருந்தார். அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அந்த வாலிபரை எச்சரித்து அனுப்பினர். இருப்பினும் தொடர்ந்து அவர் ஆபாசமாக பேசிக் கொண்டிருந்ததால் அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

