ADDED : அக் 16, 2026 07:39 PM

அ நிறம் | அளவு
பாகூர்: கிருமாம்பாக்கம் அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கிருமாம்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் சண்முகசத்தியா தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.
காட்டுக்குப்பம் பஸ் நிறுத்த பகுதியில், கஞ்சா விற்பனை செய்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். கன்னியகோவில் அடுத்த வார்க்கால்ஓடையை சேர்ந்த அபிராஜ் 20; என்பது தெரியவந்தது.
அவரை சோதனை செய்த போது, பேண்ட் பாக்கெட்டில் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருப்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவரை , கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலப்பட்டு சிறையில் அடைத்தனர்.
