/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொது இடத்தில் தகராறு வாலிபர் கைது
/
பொது இடத்தில் தகராறு வாலிபர் கைது
ADDED : ஜன 10, 2025 05:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பொது மக்களுக்கு இடையூறாக தகராறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ரெட்டியார்பாளையம் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது அரும்பார்த்தபுரம் விவேகானந்தர் வீதியைச் சேர்ந்த மணிகண்டன், 27, என்பவர், அரும்பார்த்தபுரம் மெயின் ரோட்டில் நின்று கொண்டு, அவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கு இடையூறாக தகராறு செய்து கொண்டிருந்தார். அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார், தகராறு செய்த மணிகண்டன் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

