UPDATED : நவ 12, 2026 09:52 PM
ADDED : நவ 12, 2026 09:52 PM
அ நிறம் | அளவு
காரைக்கால்: காரைக்காலில் பள்ளி மாணவனை தாக்கிய நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
காரைக்கால் அம்பகரத்துார் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் ரவி,49; . கொத்தனார். இவரது மகன் ராகுல்,15; பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.இந்நிலையில் கடந்த 11ம் தேதி ராகுல் வீட்டின் அருகே இருந்தபோது எதிர் வீட்டில் வசிக்கும் பாரதி,28; என்பவர், ஆபாசமாக திட்டி, கையால் தாக்கி கீழே தள்ளினார். பாரதி வளர்த்து வரும் நாய், ராகுலை கடிக்க வந்ததாகவும், அதனை ராகுல் விரட்டியதால் ஆத்திரமடைந்த பாரதி அவரை தாக்கியுள்ளார்.இதுகுறித்து ரவி அளித்த புகாரின்பேரில், அம்பகரத்துார் போலீசார் பாரதி மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
