ADDED : ஏப் 07, 2025 06:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி; லாஸ்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
அவர், லாஸ்பேட்டை ராமன் நகர் அருள்பிரகாஷ் (எ) அருள், 25, என்பதும், கஞ்சா பதுக்கி வைத்திருந்ததும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், ரூ.7,000 மதிப்புள்ள, 320 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

