ADDED : ஜூலை 31, 2025 03:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லியனுார்: வில்லியனுார் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு ஒதியம்பட்டு பகுதியில் ரோந்து சென்றனர். சங்கராபரணி ஆற்றங்கரை பகுதியில் கஞ்சா விற்பதாக தகவல் கிடைத்தது.
போலீசார் அங்கு சென்றபோது, அவர்களை கண்டு தப்பியோட முயன்ற வாலிபரை மடக்கி விசாரித்தனர். அவர், ஒதியம்பட்டு கே.வி. நகரை சேர்ந்த ஆரோக்கியராஜ் மகன் சத்தியராஜ், 24, என்பதும், கஞ்சா விற்பதற்கு பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 230 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இவர் மீது ஏற்கனவே இரு கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவரை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

