ADDED : நவ 22, 2025 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ரெட்டியார்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். உழவர்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே வாலிபர் ஒருவர், கஞ்சா விற்பதாக தகவல் வந்தது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கு நின்றிருந்த நபரை பிடித்து சோதனை செய்தனர். அவர், 50 கிராம் கஞ்சா பொட்டலம் மறைத்து வைத்திருந்தார். விசாரணையில், முத்திரையர்பாளையம், காந்தி திருநல்லுார், கணபதி நகர் சுரேஷ் மகன் சூரியா, 19, என, தெரியவந்தது. அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப் பதிந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

