ADDED : நவ 26, 2025 07:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரியில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
டி.நகர்., போலீசார் நேற்று முன்தினம் கோரிமேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கனரக ஊர்தி முனையம் சாலை, வெள்ளவாரி வாய்க்கால் அருகில் நின்ற வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அவர் செண்பகா நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜெயகுமார், 22; என்பதும், பாக்கெட்டுகளில் கஞ்சா வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

