ADDED : ஆக 31, 2026 09:21 PM
அ நிறம் | அளவு
: புதுச்சேரி: கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து, கஞ்சா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வாண்ரப்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பதாக ஒதியஞ்சாலை போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. அதையடுத்து, போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர். மாரியம்மன் கோவில் அருகே சந்தேகமான முறையில் நின்ற வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அவர் கஞ்சா வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும், விசாரித்ததில், வாண்ரப்பேட்டையை சேர்ந்த விஜய் (எ) வில்லியம்ஸ், 20, என்பது, மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பதாக போலீசாரிடம் தெரிவித்தார். அவரிடமிருந்து 7 பாக்கெட்டுகளில் இருந்த 5 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
